சென்னை: பணியில்லா கால மீன்பிடி உதவித்தொகையை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதற்காக ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் 2023ம் ஆண்டிலேயே பணியில்லா கால மீன்பிடி உதவித்தொகை ரூ.7ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே மீனவர்களுக்கான இந்த உதவித்தொகையை எப்படி உயர்த்தப்பட்டது என கூற முடியும் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
+
Advertisement
