கடந்த இரண்டு வார இதழ்களில் அலங்கார மீன்களின் வகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து தலைஞாயிறு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் விளக்கினார். இதன் தொடர்ச்சியாக டிஸ்கஸ் மீன், பிளவர் ஹார்ன், அரவணா ஆகிய மீன்கள் குறித்த சில தகவல்களை இந்த இதழில் பகிர்ந்துகொள்கிறார்.
டிஸ்கஸ் மீன்
* பிறப்பிடம் - பிரேசில்.
* இன முதிர்ச்சி - 12-15 மாதங்கள்.
* இனப்பெருக்க விகிதம் - 1 ஆண்மீன் 1 பெண்மீன்.
* தன் ஜோடியை தானே தேர்வு செய்யும்.
* முட்டைகள் 50 மணி நேரத்தில் பொரித்து நுண் குஞ்சுகள் வெளியேறும், 72 மணி நேரத்திற்கு பிறகு மீன்குஞ்சுகள் நன்கு நீந்தும்.
* ஒரு இனப்பெருக்கத்தில் பெண் மீன் 200-500 முட்டைகள் வரை இடும்.
* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை - 28-30 டிகிரி செ.கி.
* கார அமிலத்தன்மை 6.5 - 7.0
பிளவர்ஹார்ன்
* பிறப்பிடம் - மலேசியா (மரபணு மாற்றத்தால் உருவாக்கப்பட்டவை)
* பிளவர்ஹார்ன் பொதுவாக அதிஷ்ட மீனாக கருதப்படுகிறது.
* இனப்பெருக்க விகிதம் 1 ஆண்மீன் பெண்மீன்.
* ஆண் மீன் பெண் மீனை தாக்கும் மனப்பான்மையுடையது.
* ஒரு இனப்பெருக்கத்தில் பெண் மீன் 1000- 2000 முட்டைகள் வரை.
* அதிக உணவு உண்ணும்.
* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை 25-28 டிகிரி செ.கி.
v கார அமிலத்தன்மை 6.8 - 7.2
அரவணா
* வாஸ்து மீன் என்றே அழைக்கப்படுகிற அரவணா இன்று உலகம் முழுக்க பலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வளர்க்கப்படுகிறது.
* இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அரவணா வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
* இனமுதிர்ச்சி - 45-60 செ.மீ.
* வளர்ப்புத் தொட்டியில் நீரின் ஆழம் 0.5-0.75 மீ அளவு இருத்தல் வேண்டும்.
* முட்டைகளை வாயினுள் வைத்து அடை காக்கும்.
* இம்மீன் இயற்கையான மண் குளங்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்.
* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை 27-29 டிகிரி செ.கி.
* கார அமிலத்தன்மை 6.8-7.5
தொடர்புக்கு:
முனைவர் விஜய் அமிர்தராஜ் - 99944 50248.



