Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வளம் தரும் வண்ண மீன்கள்!

அலங்கார மீன்களுக்கென்று இந்தியா முழுவதும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. இத்தகைய அலங்கார மீன்களின் வகைகள் குறித்தும், அவற்றின் சிறப்பு இயல்புகள் குறித்தும் தலைஞாயிறு மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் விஜய் அமிர்தராஜ் கடந்த இதழில் தெரிவித்திருந்தார். சில மீன்கள் இந்த இதழிலும் பகிர்ந்துகொள்கிறார். பொன்மீனின் வாலின் அமைப்பினைப் பொருத்து ஒற்றைவால், நீள விசிறி வால் என்ற வகைகளில் உள்ளன.பொன் மீனின் உடலமைப்பு மற்றும் நிறத்தைப் பொருத்து சில வகைகள் உள்ளன.

விசிறி வால்

* காப்பர் கோல்ட்

* சிவப்பு ப்ரான்ஸ் கோல்ட்

* சில்வர் கோல்ட்

* சிவப்பு காலிக்கோ கோல்ட்

*வெள்ளை கோலிக்கோ கோல்ட்

* சிவப்பு மற்றும் வெள்ளை கோலிக்கோ கோல்ட்

* கருப்பு மூர் கோல்ட்

* முட்டை கண் கோல்ட்

* சிங்கத்தலை கோல்ட்

* ஓராண்டா கோல்ட்

* சுபன்கின் கோல்ட்

* கோய்க்கெண்டை.பிறப்பிடம் சீனா (சீனத்து சாதா கெண்டையிலிருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்டது)

* இன முதிர்ச்சி 150-250.

* இனப்பெருக்க விகிதம் 2 ஆண்மீன், 1 பெண்மீன்.

* முட்டை ஒட்டும் தன்மை உடையவை, முட்டைகளை சிதறவிடும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் 150-200 கிராம் எடை கொண்ட பெண் மீன் 2000-3000 முட்டைகள் வரை இடும்.

* முட்டைகள் 62 - 72 மணி நேரத்தில் பொரித்து நுண்குஞ்சுகள் வெளியேறும்.

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை 25-28 டிகிரி செ.கி

* கார அமிலத்தன்மை 7.5 - 85

கோய்க்கெண்டை மீன்

கௌராமி மீன்கள்:

* பிறப்பிடம் - ஆசிய நாடுகள்

* வகைகள் - குட்டை கௌராமி, முத்தமிடும் கௌராமி, நீல கௌராமி, ஹனி கௌராமி.

* இன முதிர்ச்சி - 4 முதல் 6 மாதம்.

* இனப்பெருக்க விகிதம் - 1 ஆண்மீன்: 1 பெண்மீன்.

* காற்றுக்குழி கூடுகட்டி முட்டையிடும்

* முட்டைகள் 48 மணி நேரத்தில் பொரித்து நுண் குஞ்சுகள் வெளியேறும்

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை 24-28 டிகிரி செ.கி

* கார அமிலத்தன்மை 7.5 - 8.5.

கௌராமி மீன்கள்

போராளி மீன்கள்

* பிறப்பிடம் - ஆசிய நாடுகள்

* இன முதிர்ச்சி - 150 நாட்கள்

* ஆண்மீன் பெண்மீனை விட நிறமுடையதாகவும், பெரிய துடுப்புகளைக் கொண்டும் அழகாக இருக்கும்.

* இனப்பெருக்க விகிதம் 1 ஆண்மீன், 1 பெண்மீன்.

* காற்றுக்குழி கூடுகட்டி முட்டையிடும்.

* முட்டைகள் 30-48 மணி நேரத்தில் பொரித்து நுண்குஞ்சுகள் வெளியேறும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் பெண்மீன் 300-500 முட்டைகள் வரை இடும்.

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை 25-30 டிகிரி செ.கி,

* கார அமிலத்தன்மை 7.0 - 7.5.

ஏஞ்சல் மீன்கள்

* இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்படும் அலங்காரமீன்.

* தேவதை போன்ற பரந்து விரிந்த துடுப்புகளை உடையது.

* வகைகள் - கருப்பு ஏஞ்சல், கோல்டன் ஏஞ்சல், கோய் ஏஞ்சல், மார்பிள் ஏஞ்சல் மற்றும் லேஸ் ஏஞ்சல்.

* இன முதிர்ச்சி - 8 மாதம்.

* தன் ஜோடியை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

* முட்டைகள் 72 மணி நேரத்தில் பொரித்து நுண்குஞ்சுகள் வெளியேறும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் பெண்மீன் 250-300 முட்டைகள் வரை இடும்.

* வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை 25 - 30 டிகிரி செ.கி.

* கார அமிலத்தன்மை 7.0 - 7.5.

ஏஞ்சல் மீன்கள்

ஆஸ்கர் மீன்கள்

பிறப்பிடம் - தென் அமெரிக்கா

* இன முதிர்ச்சி 45 மாதம்

* அதிகபட்சம் 35 செ.மீ வளரக் கூடியவை.

* இனப்பெருக்க விகிதம் 1 ஆண்மீன் 1 பெண்மீன்.

* முட்டைகளை கல் மற்றும் பாறைகளுக்கு இடையே இடும்.

* முட்டைகள் 30-48 மணி நேரத்தில் பொரித்து நுண்குஞ்சுகள் வெளியேறும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் பெண்மீன் 500 முட்டைகள் வரை இடும்.

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை 20-30 டிகிரி செ.கி.

* கார அமிலத்தன்மை - 6.0 - 7.5.

ஆஸ்கர் மீன்

டிஸ்கஸ் மீன்

பிறப்பிடம் பிரேசில்

* இன முதிர்ச்சி 12-15 மாதங்கள்.

* இனப்பெருக்க விகிதம் 1 ஆண்மீன், 1 பெண்மீன்.

* தன் ஜோடியை தானே தேர்வு செய்யும்.

*முட்டைகள் 50 மணி நேரத்தில் பொரித்து நுண்குஞ்சுகள் வெளியேறும். 72 மணி நேரத்திற்கு பிறகு மீன்குஞ்சுகள் நன்கு நீந்தும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் பெண்மீன் 200-500 முட்டைகள் வரை இடும்.

*வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை 28-30 டிகிரி செ.கி.

* கார அமிலத்தன்மை 6.5-7.0 அலங்கார மீன்களின் மேலும் சில வகைகள் குறித்து அடுத்த இதழிலும் காணலாம்.

தொடர்புக்கு:

முனைவர்: க.சே.விஜய் அமிர்தராஜ்

- 99944 50248.