Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முதல் இன்னிங்சில் இலங்கை 265/8: வலுவான நிலையில் இந்தியா

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா அணி அபார பந்துவீச்சால் முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி திணறி வருகிறது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 138 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தேவதத் படிக்கல் 117 ரன், துருவ் ஜுரெல் 115 ரன், ரிஷப் பண்ட் 63 ரன், கேப்டன் சுப்மன் கில் 50 ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்திருந்தது. கமில் மிஷரா 5 ரன்னுடன் களத்தில் உள்ளார். 3ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி நேற்று தொடங்கியது. கமில் மிஸ்ரா-பசிந்து சூரியபண்டார ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். கமில் மிஸ்ரா 19 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ்-பசிந்து சூரியபண்டாரவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

32 ரன்னில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் தனஞ்சய டி சில்வா 8 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய சோனல் தினுஷா-பசிந்து சூரியபண்டாரவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். சிறப்பாக ஆடிய பசிந்து சூரியபண்டார 80 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நிரோஷன் டிக்வெல்லா ரன் ஏதுவும் எடுக்காமல் அவுட்டாக 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணி திணறியது.

இதையடுத்து, சோனல் தினுஷாவுடன் ஜோடி சேர்ந்து கேஷர நுவந்த நிதானமாக ஆடிய ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 57 ரன்களை சேர்த்த நிலையில், கேஷர நுவந்த 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லஹிரு குமார தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஒரு பக்கம் சோனல் தினுஷா சிறப்பான ஆட்டத்தை ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மழை குறுக்கிட்டதால் 3ம் நாள் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருந்தனர். சோனல் தினுஷா 85 ரன்னுடனும், லஹிரு குமார 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 238 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் குறைந்த ரன்னில் இலங்கை சுருட்டி, இந்தியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது. பின்னர் பெரிய இலக்கை நிர்ணயித்து வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.