கண்மாயில் வேன் கவிழ்ந்து பட்டாசு தொழிலாளி பலி: 7 பெண்கள் காயம்
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நதிக்குடி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இதில் 25 வெளியூர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று ஆலைக்கு வந்து கொண்டிருந்தது. ராமலிங்கபுரம் அச்சம்தவிர்த்தான் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சென்னாக்குளத்தை சேர்ந்த விக்னேஷ்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வேனில் இருந்த 7 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement