Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஈரானில் வணிக வளாகத்தில் தீ; 8 பேர் பலி, 36 பேர் காயம்

தெஹ்ரான்: ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டிஷே நகரில் அர்கவான் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது. பல அடுக்குமாடிகளை கொண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. வளாகத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி அலறிஅடித்து வெளியே ஓடினார்கள். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அமெரிக்காவுடனான போர்ச்சூழலில் கடந்த மூன்று வாரங்களாகவே நிலையற்ற போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்து வருகின்றது. எனவே இந்த தீவிபத்துக்கும் போர்ச் சூழலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.