Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

375 தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு: தனியார் செக்யூரிட்டிகளுக்கு அழைப்பு

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 375 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில், அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்கு வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீ பாதுகாப்பு குறதி்து விழிப்புணர்வு வகுப்புகள் நடக்கிறது.

இந்த வகுப்பின் நோக்கமானது, பாதுகாப்பு காவலர்கள் (செக்யூரிட்டி) தாங்கள் பணிபுரியும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளவும், தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயணைப்புத்துறையினர் விபத்து இடத்திற்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது மற்றும் இந்த ஒரு முன்பதிவும் இல்லாதது. எனவே தங்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு தீயணைப்பு நிலையங்களில் மேல் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் அழைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.