பாக்தாத்: கிழக்கு ஈராக்கின் வாசிட் மாகாணம் குட் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வணிக வளாகம் (மால்) திறக்கப்பட்டது. ஐந்து மாடிகளை கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஒரு மிகப்பெரிய உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அமைந்துள்ளன. இந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 61 பேர் பரிதாபமாக பலியாகினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 45க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.