Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக கரும்புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எதனால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பைக்குகள் எரிந்து சாம்பல் ஆனது. பள்ளிக்கரணை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எரிந்து ஏராளமான கார்கள் எலும்பு கூடாக மாறின. தீ விபத்து காரணமாக மேடவாக்கம் - வேளச்சேரி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்தனர். கரும்புகையை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிநீர் வாரிய வளாகத்தில் இரண்டு மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு ஏற்பட்டது.