டெல்லி: திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்கிற ஜானி பாஷாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருது பெறுவதற்காக ஜாமீன் கோரிய ஜானிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருதை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement


