Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றாக இருக்கும் படத்தை தாய்க்கு அனுப்பி மாணவன் டார்ச்சர் மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி: ஒன்றாக இருக்கும் படத்தை தாய்க்கு மாணவன் அனுப்பி டார்ச்சர் செய்ததால், பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே சிந்தகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதே பள்ளியில், அவரது உறவுக்காரரின் மகனும் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவன் மாணவியுடன் ஒன்றாக இருக்கும் படத்தை அவரது தாயாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மகளிடம் கேட்டு கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாணவி, கடந்த 1ம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜகடை போலீசார் மாணவன் மீது வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.