Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நிறைவு: இன்று பரிசீலனை

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், மதுராந்தகம் தொகுதியில் 48 பேரும், தாராபுரத்தில் 39 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. 14ம் தேதி வரை சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி திமுக, தவெக, நாம் தமிழர், சுயேட்சை உள்ளிட்ட கட்சிகள் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான நேற்று அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் மாலை 3 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 8 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனுதாக்கலில் 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இதேபோல், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.