பெராரி நிறுவனம், அமால்பி ஸ்பைடர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.9 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 640 எச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. 3.3 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். 4 சீட்கள் கொண்ட இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 8.8 அங்குல பயணிகள் டிஸ்பிளே, 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், 15.6 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளேமேட் கண்ட்ரோல் உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.5.59 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+


