மீண்டும் மீண்டும் மாறும் கணிப்புகள்.. வானிலை மையத்திற்கு போக்கு காட்டும் ‘ஃபெங்கல்' புயல்...
Advertisement
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வானிலை மைய கணிப்புகளில் ‘ஃபெங்கல்' புயல் போக்கு காட்டி வருகிறது. அவை பின்வருமாறு...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறும்.
-நவ.26, மதியம் 12 மணியளவில்
புயலாக உருவாவதில் தாமதம். அடுத்த 12 மணிநேத்தில் உருவாக வாய்ப்பு.
-நவ.27, இரவு 8 மணியளவில்
இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலை வரை தற்காலிக புயலாக மாறும்
-நவ.28, மதியம் 3 மணியளவில்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.
-நவ.28, இரவு 8 மணியளவில்
வலுவிழக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும்.
-நவ.29, காலை 8 மணியளவில்
புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும்
-நவ.29, காலை 11 மணியளவில்
Advertisement