Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு இன்ஸ்பெக்டர் மாற்றம்

தூத்துக்குடி: பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் இன்னோஸ்குமார். இவர், கடந்த தசரா திருவிழாவின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், அந்த பெண் போலீசுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ், இதுகுறித்து நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசிடம் நேரடியாக புகார் செய்துள்ளார். இதையடுத்து அவர், துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவிட்டு உள்ளார்.