போலி நகைகளை வைத்துவிட்டு ரூ.4.10 லட்சம் மதிப்பு நகையை திருடிய பெண் ஊழியர் கைது
Advertisement
இதனால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் ரேவதிக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை ஆய்வு ெசய்த போது, அதில் ₹6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடுபோனது தெரியவந்தது. உடனே கடை உரிமையாளர் சுரேஷ் ஜெயின், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்திய போது, ரேவதி திட்டமிட்டு திருடிய நகைகளுக்கு பதில் போலியான நகைகளை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் படி, எம்.கே.பி.நகர் சர்மா நகரை சேர்ந்த ரேவதியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement