தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் ரூ.75,000 தள்ளுபடி செய்ய வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்

 

Advertisement

சென்னை: விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் ரூ.75,000 தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகக் கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியைக் கொடுக்கும். எனவே, இதை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement

Related News