Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொய் வாக்குறுதி தரும் பாஜவையும் ஆபத்தான அண்ணாமலையையும் தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும்: நடிகை விந்தியா பேச்சு

வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து திரைப்பட நடிகை விந்தியா நேற்று மாலை கொளத்தூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: சென்னையில் பெரு மழை பெய்தபோது யாருமே வந்து பார்க்கவில்லை. ஆனால், இப்பொழுது செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஓடி வருகிறார். 10 வருடம் எதுவுமே செய்யாத பாஜ, மக்களை ஏமாற்றுவதற்காக வருவார்கள். தயவு செய்து நம்பாதீர்கள். இந்த தேர்தலில் பாஜ ஜெயித்தால் அடுத்த கட்சியில் இருந்து அவர்கள் ஆளை தூக்குவார்கள். இதனால் மக்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.

இதுவே அதிமுக ஜெயித்தால் மக்கள் ஜெயித்த மாதிரி உங்கள் கையில் வலுவான ஆயுதம் கிடைத்துள்ளது. அதுதான் இந்த தேர்தல். அந்த ஆயுதம் பாஜ கையில் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு உங்களை அழிப்பார்கள். அந்த ஆயுதத்தை அதிமுகவிடம் கொடுத்து பாருங்கள். தேர்தல் சமயத்திற்காக நான்கு நாட்கள் வரும் பிரதமரை தமிழ்நாட்டிலேயே தவம் கிடக்க வைப்போம். எங்களுக்கு காங்கிரசும் ஒன்றுதான் பாஜவும் ஒன்றுதான். மக்கள் தேவைக்காக நாங்கள் இரண்டு பேரையும் எதிர்ப்போம்.

நாங்கள் உங்களுக்காக கொடுக்கின்ற ஒரே வாக்குறுதி என்னவென்றால் ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களிடம் தமிழக மக்களுக்காக பேசி தேவையான அனைத்து விஷயத்தையும் பெற்றுத் தருவோம். வாயில் வடை சுடும் பாஜவையும், ஈடியை வைத்து மிரட்டும் பாஜவையும் இந்த தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் வைத்து மிரட்டும் பாஜவையும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் பாஜவையும் இந்த தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும். நாட்டையே அழிக்க நினைக்கிற பாஜவையும் ஆபத்தான அண்ணாமலையையும் இந்த தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.