Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோலாகலமாக நடந்த ஏழூர் சப்பர திருவிழா; ஆயிரக்ணக்கான மக்கள் பங்கேற்பு!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஏழூர் சப்பர திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். மதுரை மாவட்டத்தில் கல்லுபட்டி பகுதியில் பழைய வரலாற்றை நினைவு கூறும் வகையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏழூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதுபோல் இந்த ஆண்டும், இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், இந்த பகுதில் இருந்து சென்று வசித்தவர்கள் குடும்பத்துடன் வந்து 2 தினங்களாக, இந்த கிராமத்தில் தங்கி குடைசூழ இந்த திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

முன்பு ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் வறட்சி நிலவி கஷ்டம் பரவி வந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 7 சிறுமிகளுடன் வந்த மூதாட்டி தங்களுக்கு பசியாற உணவு வேண்டி வந்த பொது அவர்களுக்கு, பசியாற உணவு குடுத்து வழங்கிய, இந்த கிராம பகுதி மக்கள் அந்த மூதாட்டியுடன் வந்த 7 சிறுமிகள் இந்த பகுதியில் காலடி எடுத்து வைத்தவுடன் மழை பொழிந்ததாகவும், வறட்சி நீங்கி, விவசாயம் செழித்ததாகவும் வரலாறு கூறப்படுகிறது, எனவே அதனை நினைவு கூறும் வகையில், 7 சிறுமிகளுடைய உருவத்தை ஏழுர் அம்மன்களாக வழிபட்ட இந்த கிராம மக்கள்.

ஒவ்வொரு கிராமத்திலும் அதற்கான 40 அடி உயரமுடைய சப்பரத்தை வண்ணவண்ண கலரால் தயாரிக்கப்பட சப்பரத்தை, ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், தாய் கிராமமான அம்மாப்படி கிராமத்திற்கு தலையில் சுமந்து வந்து, ஆரவாரத்துடன் மஞ்சள் நிற துண்டுகளை சுழற்றிவந்து, அம்மனை வழிபடுவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் அம்மாபட்டி கிராமத்தை சூழ்ந்துள்ளனர்.

இங்கு அதற்கென உருவெடுத்து வடிக்கப்பட்டுள்ள 7 அம்மன்களுடைய சிலைகளை இங்கிருந்து ஒவ்வொரு சப்பரமாக, ஒவ்வொரு கிராமத்திற்கும் அதாவது தேவன்குறிச்சி, வன்னிவேலன்பட்டி, டி.கல்லுப்பட்டி, கிலான்குளம், காடனேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு எடுத்து சென்று அந்த அம்மனை வழிபடுவது தொடர்கதையாகி வருகிறது.

அத்தகைய திருவிழாவில் கல்லுப்பட்டி கிராமம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்களின் தலைகளாகவே கட்சி அளிக்கிறது, இந்த பெரும் விழாவிற்காக இந்த பகுதியே போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திருவிழாவிற்க்காக 500 க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்