சென்னை: கோயில் திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் மாசிதிருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறியுள்ளார்.