Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்தியாவில் யூரோப்கிரிப்பின் புதிய அட்வென்ச்சர் டூரிங் டயர் வரிசையை அறிமுகப்படுத்திய எம்எஸ். தோனி

சென்னை: இந்தியாவின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன டயர் பிராண்டான யூரோப்கிரிப் டயர்ஸ், தனது சர்வதேச அட்வென்ச்சர் டூரிங் அணிவரிசையான 'ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர்' (Trailhound STR)-ஐ இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் பிரபல டயர் பிராண்டான யூரோ கிரிப் – ன் இப்புதிய தயாரிப்பை இந்த பிராண்டின் தூதரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான எம்எஸ்.தோனி அறிமுகப்படுத்தினார்.

நடுத்தர மற்றும் பெரிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர், நெடுஞ்சாலைகள் மற்றும் இலகுவான சாலையற்ற (ஆஃப்-ரோடு) நிலப்பரப்புகள் ஆகிய இரண்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கையளிக்கும் செயல்திறனை வழங்குகிறது. இந்த தொடக்க விழாவின் போது மோட்டார்சைக்கிள்கள் மீது தீவிர ஆர்வம் கொண்ட எம்எஸ். தோனி, நேரடியாக இப்புதிய டயர்கள் பொருத்திய மோட்டார்சைக்கிள்களை ஓட்டி அதன் செயல்திறனை உறுதிசெய்தார்.

யூரோப்கிரிப்பின் உலகளாவிய பிரீமியம் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர், இப்போது இந்திய நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் அட்வென்ச்சர் டூரிங் பிரிவில் யூரோ கிரிப் பிராண்டின் விரிவாக்கத்தை இந்த புதிய அறிமுகம் வெளிப்படுத்துகிறது.

இந்தத் தொடக்க விழாவில் பேசிய டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி திரு. டி.கே. ரவி அவர்கள் கூறுகையில், "நெடுஞ்சாலைகள் மற்றும் இலகுவான ஆஃப்-ரோடு தரைப்பரப்புகளில் உயர் செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் நம்பகமான டயர்களை அதிகமான ரைடர்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர். இதனால் இந்தியாவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பயணத்துறை தொடர்ந்து வலுவான வளர்ச்சி வேகத்தைக் கண்டு வருகிறது. உலகளாவிய சந்தைகளில் ட்ரெயில்ஹவுண்ட் வரிசையின் வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து, இப்போது இந்திய ரைடர்களுக்கும் ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர் டயர்களின் அணிவரிசையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இனிவரும் காலங்களில் எங்களின் சர்வதேச முன்னணி தயாரிப்புகளை நாங்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு கொண்டு வருவோம்" என்றார்.

இத்தயாரிப்பின் வடிவமைப்பு குறித்துப் பேசிய டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் துணை இயக்க அலுவலர் & தலைமை தொழில்நுட்ப அதிகாரி திரு. வி. சிவராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "ட்ரெயில்ஹவுண்ட் எஸ்டிஆர்-ஐ உருவாக்கும் போது, எங்களது கவனம் சாலையில் மோட்டார்சைக்கிள்களை கையாளுதலுக்கான முன்கணிப்புத் திறனை வழங்குவதுடன், அவ்வப்போது தேவைப்படும் ஆஃப்-ரோடு சாகசத் திறனையும் தக்கவைக்கும் ஒரு டயரை உருவாக்குவது மீது இருந்தது. இதற்கு உகந்த திறன் கொண்ட 90/10 டிரெட் பேட்டர்ன், பல்வேறு சாகசப் பயண நிலைமைகளில், வாகனத்தை ஓட்டும்போது தண்ணீரைப் பிரித்து வெளியேற்றும் திறனையும், இழுவிசையையும் மேம்படுத்துகிறது. மோட்டார்சைக்கிள் சாகசப் பயண ஆர்வலர்களின் வளர்ந்து வரும் தேவைகளை இது சிறப்பாக பூர்த்தி செய்யும்" என்றார்.

இத்தயாரிப்பு அணிவரிசையின் அறிமுக விழாவில் பேசிய எம்எஸ். தோனி அவர்கள், "இந்தியாவில் யூரோப்கிரிப் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் டயர்களது அணிவரிசையை தொடர்ந்து விரிவுபடுத்துவதைக் காண்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் யூரோப்கிரிப்பின் முதன்மையான டயர்கள் பொருத்திய மோட்டார்சைக்கிளில் சவாரி செய்வதை நான் பெரிதும் ரசித்தேன்" என்றார்.

இந்தப் புதிய தயாரிப்பு அணிவரிசை, கீழ்வரும் பல்வேறு அளவுகளில் கிடைக்கும்: பிஎம்டபுள்யூ GS310, சுசூகி V ஸ்ட்ரோம் 650 XT, பிஎம்டபுள்யூ F850 GS, ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின், மோட்டோ மோரினி X கேப் 650, ட்ரையம்ப் டைகர் 1200 ராலி எக்ஸ்ப்ளோரர் மற்றும் பெனெல்லி TRK 502x (Benelli TRK 502x) போன்ற பிரபலமான பைக் மாடல்களுக்குப் பொருந்தும் வகையில் 90/90-21 54V, 110/80 R19 59V, 150/70 R18 70V, 150/70 R17 69V என்ற அளவுகளில் கிடைக்கின்றன.

மேலும், இந்த அறிமுக விழாவின் போது, யூரோப்கிரிப்பின் கிரியேட்டர் சர்க்யூட் போட்டியின் வெற்றியாளர்களையும் இந்நிறுவனம் கௌரவித்து பெருமைப்படுத்தியது. பைக் சவாரி மற்றும் படைப்பாளர் சமூகத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக சிறப்பு விருதுகள் வழங்கி அவர்கள் பாராட்டப்பட்டனர்.