ஈரோட்டில் தூய்மைப் பணியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
ஈரோடு: ஈரோட்டில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, உழைப்போர் உரிமை இயக்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகர்ச்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் நேற்று தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல பணியை மேற்கொண்டபோது அங்கு வந்த நபர் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளர் ராஜேஷ் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடமும் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக தூய்மை பணியாளர்கள் நேற்று ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அந்த தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று ஈரோடு மாநகர்ச்சியில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகர்ச்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஈடுபட்டனர். பணியில் இருந்த தூய்மை பணியாளரை தாங்கியவர் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்த தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் மாநகர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



