Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

EPFO சேவை

EPFO சேவை UPI செயலிகள் மூலம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள் , தங்கள் பிஎஃப் கணக்கை எளிதாக நிர்வகிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் GooglePay, Paytm, PhonePe போன்ற UPI செயலிகள் மூலம் தங்கள் PF பணத்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தையும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் ATM மூலம் வைப்பு நிதியிலிருந்து பணம் பெறும் சேவைகளும் மே அல்லது ஜூன் மாதத்தில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக PF பணத்தை எடுக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்த நிலையில், இந்த திட்டம் அமலுக்கு வந்தால் சில நிமிடங்களில், PF சந்தாதாரர்கள் பணத்தை பெற முடியும். கடந்த ஜனவரி மாதம் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, EPFO3.0 திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்குள் ATM மூலம் PF பணம் எடுக்கும் திட்டமும் செயல் படுத்தப்படும் என கூறினார். ஒருவேளை நீங்கள் இன்னும் இணைய EPFO சேவையை பயன்படுத்தவில்லை எனில் உடனே அதற்கான வழிகளை மேற்கொள்ளவும்.