திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசெய்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மதுரை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் TN Rising மாநாடுகளை நடத்தி வருகிறோம் என மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் ஒவ்வொருவரின் பங்கு அவசியம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என நிரூபித்து காட்டியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசெய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


