Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ், 103  ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பரிதாப தோல்வி

லீட்ஸ்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. ஹெடிங்லி மைதானத்தில் நடந்துத இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீசிய நிலையில், பாகிஸ்தான் 171 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன், டங் தலா 5 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 366 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 409 ரன் குவித்து ஆல் அவுட்டானது (89.5 ஓவர்). ஹாரி புரூக் 91, காக்ஸ் 73, கேப்டன் ரூட் 66, லாரன்ஸ் 51 ரன் விளாசினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அலி உஸ்மான் 5, குர்ரம் ஷாஷத் 3, அப்பாஸ், முகமது அலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 238 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 37.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 135 ரன்னில் பரிதாபமாக ஆல் அவுட்டானது. ரிஸ்வான் 41, ஷான் மசூத் 29, அப்துல்லா ஷபிக் 15, ஷகீல் 14 ரன் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன், ஆர்ச்சர், ஜோஷ் டங் தலா 3 விக்கெட், அட்கின்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆக.27ல் தொடங்குகிறது.