கேன்டர்பரி: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 20ம் தேதி முதல், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முன்னதாக, இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு எதிராக நேற்று முன்தினம், கேன்டர்பரி நகரில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி துவங்கியது. நேற்று உணவு இடைவேளை வரை இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 533 ரன் குவித்திருந்தது. இந்திய அணி வீரர் கருண் நாயர் அபாரமாக ஆடி, 281 பந்துகளில், ஒரு சிக்சர், 26 பவுண்டரிகளுடன் 204 ரன் குவித்து அவுட்டானார். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.