Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காங்கோவை வீழ்த்தி முன்னேறியது இங்கிலாந்து

அட்லான்டா: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ரவுண்ட் ஆப் 32 போட்டியில் கானா அணியுடன் மோதிய இங்கிலாந்து, கேப்டன் கேன் அசத்தலில் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது. அட்லான்டா அரங்கில் நடந்த இப்போட்டியின் 7வது நிமிடத்திலேயே காங்கோ வீரர் பிரையன் சிபெங்கா அபாரமாக கோல் போட்டு இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து பதில் கோலடிக்க இங்கிலாந்து தரப்பு கடுமையாக முயற்சித்தும், காங்கோ தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் பலன் கிடைக்கவில்லை.

இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் மேற்கொண்ட பல முயற்சிகளை கோல் கீப்பர்கள் துடிப்பாகப் பாய்ந்து தடுத்து கோல் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்டம் முடிய கால் மணி நேரமே இருந்ததால் இங்கிலாந்துக்கு நெருக்கடி முற்றியது. சரியாக 75வது நிமிடத்தில் கேப்டன் ஹாரி கேன் பந்தை அற்புதமாக தலையால் முட்டி கோல் போட 1-1 என சமநிலை ஏற்பட்டதால் இங்கிலாந்து வீரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

அடுத்து 86வது நிமிடத்தில் எதிரணி வீரர்களை சமாளித்து ஹாரி கேன் மீண்டும் மின்னல் வேகத்தில் கோல் அடித்து அசத்த இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. நடப்பு உலக கோப்பை தொடரின் தலைசிறந்த கோல் எனும் அளவுக்கு ஹாரியின் சாகசம் இருந்தது. இதையடுத்து கடைசி கட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது. எனினும், மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் இங்கிலாந்து போராடி வென்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) தகுதி பெற்றது.

முக்கால் பகுதி ஆட்டத்தில் முன்னிலை வகுத்த காங்கோ, கடைசி நிமிடங்களில் வெற்றியை கோட்டைவிட்டதால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர். ஜூலை 6ம் தேதி மெக்சிகோ சிட்டி அரங்கில் நடக்கும் ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தில் இங்கிலாந்து மெக்சிகோ அணிகள் மோதுகின்றன.