பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் நானோ சயின்ஸ் டெக்னாலஜி படிப்பு: அண்ணா பல்கலை சிறப்பு ஏற்பாடு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Advertisement
ஆன்லைன் படிப்பில், இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் சேரலாம். இந்த படிப்பில் நானோ டெக்னாலஜி தொடர்பான அடிப்படை விஷயங்கள், அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் போன்றவை குறித்து சொல்லித் தரப்படும். இதற்கு பதிவு செய்ய கடைசி நாள் வரும் 18ம் தேதி. கூடுதல் விவரங்களை பெற 8098953365 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Advertisement