பணியிடங்கள் விவரம்:
1. டெபுடி மேனேஜர்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.60,000- ரூ.1,80,000. வயது: 35க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/சோலார்/புதுப்பிக்கத்தக்க எரிசக்தி/ பவர் சிஸ்டம்/சிவில்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. அக்கவுன்ட்ஸ் ஆபீசர்: 1 இடம். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சியுடன் 60% மதிப்பெண்களுடன் நிதி பாடத்தில் எம்பிஏ தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. ஆபீசர்:
i) சட்டம்: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.69,170/-.
ii) மனிதவளம் மற்றும் நிர்வாகம்: 2 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.40,000-ரூ.1,40,000.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எல்எல்பி தேர்ச்சி அல்லது மனிதவளம் மேலாண்மை/தொழில் உறவுகள்/பெர்சனல் மேனேஜ்மென்ட்/லேபர் வெல்பேர்/லேபர் அட்மினிஸ்டிரேஷன்/லேபர் ஸ்டடீஸ் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. இன்ஜினியர் (கார்ப்பரேட் பிளானிங்): 1 இடம்.
வயது: 28க்குள். சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000.
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60%
மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
5. சீனியர் இன்ஜினியர்: 11 இடங்கள். வயது: 33க்குள்.
சம்பளம்: ரூ.82,500- ரூ.97,500. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/
சிவில்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. டெபுடி மேனேஜர்: 7 இடங்கள். வயது: 40க்குள்.
சம்பளம்: ரூ.95,580- ரூ.1,10.830. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/சிவில்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் அல்லது சட்டம் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.seci.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2026


