சென்னை: அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மற்றும் அடுத்த வாரம் ஒரு நாள் என இரு நாட்களில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் ஆஜராக சி.விஜயபாஸ்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
+
Advertisement


