சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!
Advertisement
சைதாப்பேட்டையில் தனியார் நிறுவன இயக்குனர் அலங்கநாதனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விருகம்பாக்கம் காவேரி தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினர். அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பாண்டியன் வீட்டில் 2021 -ல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தியது. 2021-ல் சோதனையின் போது ரூ.1.37 கோடி, 3 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement