தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பிஎஸ்என்எல் - உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Advertisement

சென்னை: தொலை தொடர்பு துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், பொது மக்களிடம் அதிநவீன தகவல் தொடர்பை கொண்டு சேர்க்கும் வகையிலும் பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுமக்களிடம் அதிநவீன தகவல் தொடர்பை கொண்டு சேர்த்தல், தகவல் பாதுகாப்பை மேம்படுத்துதல், கண்ணாடி இழை தொழில்நுட்ப சேவைகளை நடுத்தர, சிறு ,குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாக பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிஎஸ்என்எல் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கல்யாண் சாகர் நிப்பானி, தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைத்தொடர்பு தலைமை பொது மேலாளர் பார்த்திபன், முதன்மை பொது மேலாளர் மனிஷ சுக்லா ஆகியோர் தலைமையில் கையெழுத்தானது. மேலும் இதில் டெல்லியிலிருந்து இணைய வழியில் பிஎஸ்என்எல் தலைவர் ராபர்ட் ஜெராட் ரவி கலந்து கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.தொடர்ந்து அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: டெலிகாம் பிஎஸ்என்எல் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை, அதனால்தான் மனிதவளம் குறைவாக இருக்கிறது. மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் - ஏஐஎம்ஒ (AIMO) இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து அமைச்சர்களோடு பேச இருக்கிறோம். பிஎஸ்என்எல் உடன் இணைந்து நாடு முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு தொலை தொடர்பு குறித்த பயிற்சி அளிக்க இருக்கிறோம், குறைந்தபட்சம் 12ம் வகுப்பு கல்வி தகுதியும் 21 வயது நிரம்பி இருந்தால் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். டெலிகாம் தொழில்துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பது தெரியவில்லை. நாளைக்கே 100 தொழில்நுட்ப வல்லுநர் வந்தாலும் வேலைக்கு ஆள் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருந்தால் போதும் நாங்களே பயிற்சி வழங்கி வேலையும் வழங்குகிறோம். டவர் டெக்னீசியன் டெலிகாம் டெக்னீஷியன், பிரோட் பேண்ட் டெக்னீசியன் உள்ளிட்டர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கிறோம். பயிற்சி வழங்கி வேலைக்கு எடுத்து பின் இளைஞர்களே தொழில் முனைவராக உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement

Related News