Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்னணு இயந்திரங்கள் மீதான விமர்சனங்களை திசை திருப்ப இடைதேர்தலில் வேண்டுமென்றே தோற்ற பாஜ: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை திசை திருப்புவதற்காக,பீகார், மபியில் நடந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜ வேண்டுமென்றே தோற்றது என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். பீகார் மாநிலம் பங்கிப்பூர் மற்றும் மபியின் தட்டியா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜ கட்சி படுதோல்வியடைந்தது.

இந்த நிலையில் லக்னோவில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில்,‘‘ நேர்மையின்மை இல்லாமல் தேர்தல்களில் வெற்றி பெற முடியுமா என்பதைச் சோதித்துப் பார்க்கவே, பாஜ இந்த இடைத்தேர்தல்களில் வேண்டுமென்றே தோல்வியடைந்தது. உபி மற்றும் மேற்கு வங்கத்தில் அது கையாண்ட மாதிரியை பங்கிபூர் மற்றும் தட்டியாவில் அது பின்பற்றவில்லை.

மக்களைத் திசை திருப்புவதற்காக மட்டுமே பாஜ இந்த இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இனிமேல் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பாது என்று அவர்கள் கூறுவார்கள். பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த இடைத்தேர்தல்களில் வேண்டுமென்றே தோற்றுள்ளனர்,’’ என்றார்.