Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு நடுவே அதிகரித்துள்ள மின்சார வாகன விற்பனை..!

டெல்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகனங்கள் (e-PV) விற்பனை முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்து உள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 26,319 யூனிட் மின்சார வாகனங்கள் ரெஜிஸ்டராகி புதிய சாதனை படைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் புதிய மாடல்களின் வருகையே இந்த அதிகரித்த விற்பனைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மின்சாரப் பயணிகள் வாகன பதிவுகள் 1% அதிகரித்துள்ளன. அதே நேரம் ஏப்ரல் மாதத்தில் மொத்த பயணிகள் வாகனப் பதிவுகளில் 5.9%-ஆக இருந்த மின்சார கார்களின் பங்களிப்பு, மே மாதத்தில் சுமார் 6.4%-ஆக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) மின்சார பயணிகள் வாகனப் பதிவுகள் 77% அதிகரித்து 52,274 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளன.

மே மாதத்தில் 10,236 எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை பதிவுசெய்து, மார்க்கெட்டில் 39% பங்கைக் கைப்பற்றியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். அதே நேரம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 6,133 யூனிட்ஸ்களுடன் 23% மார்க்கெட் ஷேரை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.