கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிடி நிறுவனம், ஆம்பியர் என்ற பிராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் வாகன விற்பனை புள்ளி விவரங்களினப்டி, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் இந்த நிறுவனம் 4.4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. ரியோ 80 தொடங்கி நெக்சஸ் ஸ்கூட்டர் வரை பல ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மேலும் காலூன்றும் வகையில் ரூ.1 லட்சம் விலைக்குள் ஸ்கூட்டர்களை நடப்பு நிதியாண்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக, இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
+
Advertisement

