தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்த தேர்தல் ஒரு விபத்து; லாட்டரி சீட்டு அடித்தது போல் தவெகவுக்கு லக்கு அடித்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி செம கலாய்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் கண்ணீர் வடித்தார்கள். 1962ல் காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். அப்போது சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மதியழகன் உள்ளிட்ட சிலர் நாங்கள் ராஜினாமா செய்கிறோம். நீங்கள் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றனர். அப்போது பேசிய கலைஞர், அண்ணா தோல்வியடையவில்லை. தோற்று காட்டினார் என்று பேசினார்.

Advertisement

இந்த தேர்தலில் நமக்கு எந்த நட்டமும் இல்லலை. எதற்கு வெற்றி பெற்றோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. திமுகவுக்கு என்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. தவெக கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார்களா. யார் எம்எல்ஏ என்று கூட தெரியாமல் விஜய்க்காக வாக்கு அளித்துள்ளனர். ‘லாட்டரி சீட்டு அடித்தது போல் ஒரு லக்கு’ தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடித்துள்ளது. அது கூட முழு மெஜாரிட்டி இல்லை. இந்த தேர்தல் ஒரு விபத்து.

அண்ணாமலை யாரை எதிர்க்க போகிறார், யாருக்கு பி பார்ட்டியாக, சி பார்ட்டியாக இருக்கப் போகிறார். ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் நாம். திமுக லட்சியத்துக்காக கொள்கைக்காக இயங்கும் கட்சி. இதை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement