சென்னை: ஜனநாயகத்தின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.முகமது பிலால் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் மறைக்காயர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட செயலாளர் நெல்லை ஜாஹிர், சைதை அபுதாஹிர், சிப்லி அஹமத், ஹாஜாகர், ஆலந்தூர் தொகுதி தமீம் அன்சாரி, வேளச்சேரி தலைவர் அபூபக்கர், சோழிங்கநல்லூர் செயலாளர் பனையூர் அன்சாரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல, சென்னையில் உள்பட 7 இடங்களில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

