Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் கமிஷனால் விஜய்க்கு பேரிடி: மாஜி அமைச்சர் வீடியோ பதிவு

மதுரை: தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்காதது முதலமைச்சர் விஜய்க்கு பேரிடி என்றும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: அரியணையை காப்பாற்ற விஜய் நடத்துகிற ஆள்பேரம் நமக்கு அதிர்ச்சியை தருகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற ஆள்பேர அரசியல், குதிரை பேர அரசியல், சட்டப்படி நியாயப்படி தர்மப்படி ஆரோக்கியமான ஜனநாயக அரசியலாக இல்லை என்பதாலோ என்னவோ பீகார், மத்தியப்பிரதேசம், குஜராத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடவில்லை.

முதல்வர் விஜய் இலக்கை எட்டுவதற்காக மொத்தம் 12 எம்எல்ஏக்களை காலி செய்ய வைத்து அதிரடி அரசியல் அரங்கேற்றம் செய்வதற்கு தயாராக இருந்தபோது, பேரிடியாக தற்போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிற ஆறுதல் செய்திதான் தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைத்திருக்கின்றது. பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.