Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தேர்தலை நடத்த எதிர்ப்பு பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாக்குதலில் 20 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ஏராளமான ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவை எதிர்த்து நடந்த பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் 20 பொதுமக்களை ராணுவம் சுட்டுக்கொன்றது.

50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரவாலகோட்டின் ட்ரெய்க் எய்த் பகுதியில் வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் சாலை முழுவதும் சடலங்கள் காணப்படுகின்றன.

* உனக்கு 9 எனக்கு 4

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறைக்கு மத்தியில் நடந்த முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி மொத்தம் உள்ள 13 இடங்களில் 9 இடத்தையும், மீதமுள்ள 4 இடங்களை பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கைப்பற்றியது.