தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை: ராகுல் காந்தி
டெல்லி: தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “பீகார் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இது ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் பாதுகாப்பதற்கான யுத்தம். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்து, ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் வலுவாக செயலாற்றுவோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement