Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவர் கைது

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து (வயது 60). இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். அப்போது சிறுமி கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் ஆச்சிமுத்துவை மடக்கி பிடித்து பாடாலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் ஆச்சிமுத்துவை கைது செய்தனர். இதுகுறித்து ஆச்சிமுத்து மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.