நகைக்காக மூதாட்டி அடித்துக் கொ* : கடலூர் அருகே கொடூரம்!
கடலூர்: கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூரில் கலா என்ற மூதாட்டி நகைக்காக கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்து, அவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த கலா என்ற மூதாட்டி, இவர் கடலூரில் உள்ள நகை கடைகளின் வெளியே சாலையை சுத்தம் செய்யும் பணி செய்து வந்துள்ளார். பணி முடிந்த பிறகு திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் நகர் ரயில் தண்டவாளம் அருகே முரளி என்பவரின் வீட்டு வாசலில் கலா உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நேற்று வழக்கம்போல் முரளி வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி காலையில் காது, மூக்கு அறுப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசரணையில் மூதாட்டியின் நகைக்காக அவரின் காது, மூக்கு அறுத்து அவரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.