Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு குறைவு: வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மொகபத்ரா தகவல்

எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மொகபத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 15 முதல் 21ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மொகபத்ரா கூறியுள்ளார். மேலும், புயல் அமைப்புகள் இல்லாதபோது தமிழ்நாட்டில் மழை குறையலாம் என்றும், அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரை தென் தமிழ்நாடு, வட தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் கேரளாவின் மலைப் பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளார்.

பருவமழை காலத்தில் தென் தீபகற்ப பகுதியின் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு எல் நினோ காரணி வலுவாக உள்ளதாகவும், இது நவம்பர் இறுதி வரை வலுவாக நீடித்து, பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இருப்பினும், மார்ச் 2027ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் தொடரலாம் என்றும் கணித்துள்ளார்.

எல் நினோ டிசம்பர் மாதம் வரை நடுநிலையாகவே தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அடுத்த சில மாதங்களில் இது நேர்மறை நிலையை எட்டக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மொகபத்ரா கணித்துள்ளார்.