Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எள் பயிரைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய்

இந்த நோய் எள் பயிரின் எல்லா வளர்ச்சி நிலையிலும், எல்லா பாகங்களையும் இந்நோய் தாக்கும். ஈரப்பதமுள்ள தட்பவெப்ப நிலையில் இலைகளில் வட்டமாக செம்புள்ளிகள் தோன்றி வேகமாக பரவும். தேமல் போல் எல்லா பாகங்களுக்கு பரவும்.

கட்டுப்பாட்டு முறைகள்

இந்த இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகையினை (கிருஷ்ணா) வளர்க்கலாம். சூரியகாந்தி போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம்.

பாக்டீரியல் கருகல் நோய்

இலைகளில் சிறிய புள்ளிகள் தோன்றி, பாதகமான வானிலை நிலவும் நேரங்களில் இலைகள் பழுப்பு நிறம் அடையும். பயிரின் எல்லா நிலைகளிலும் பாதிப்பு ஏற்படும். இலைகள் கருகி, முற்றிய நிலையில் உதிர ஆரம்பித்துவிடும்.

தடுப்பு முறை

இந்நோய்க்கு பயிர் சுழற்சி முறை நல்ல தீர்வு தரும். எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரான - டி 58 பயிரிடலாம். முன் விதைத்தல் முறையில் மழைப்பருவம் ஆரம்பம் ஆனவுடன் விதைக்க வேண்டும். பயிர்க் கூளங்களை அகற்றுவது அவசியம். வெந்நீரில் (520° செ) பத்து நிமிடம் விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது.

பாக்டீரியல் இலைப்புள்ளி நோய்

இலை நரம்புகளில் சிறிய இளம் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். புள்ளிகளைச் சுற்றி அடர்பழுப்பு நிற எல்லைக்கோடு இருக்கும்.இலை உதிர்தல், தண்டு பாதித்தல் உருவாகும். முற்றிய நிலையில் பயிர் இழப்பு ஏற்படும். குழி போன்ற புள்ளிகள் காய்களில் தோன்றும்.

பாதுகாப்பு முறைகள்

பயிர்சுழற்சி செய்தல், எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்களைப் பயன்படுத்தல், வெந்நீரில் (520° செ) பத்து நிமிடம் பயிர் நேர்த்தி செய்தல் ஆகியவை இதற்கான சரியான தீர்வுகள்.