முட்டை விலை 10வது நாளாக தொடர்ந்து உயர்வு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லாத நிலை, கடந்த 2 வாரமாக நிலவி வருகிறது. இதனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் 5 காசுகள் வீதம் முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை மண்டல தலைவர் சிங்கராஜ் உயர்த்தி வருகிறார். நேற்றும் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 585 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளிலும் முட்டை விலை உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement