நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 580 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் விற்பனை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், முட்டைக்கு டிமாண்ட் ஏற்பட்டு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ ரூ.106 ஆக உள்ளது.
+
Advertisement
