முட்டை விலை 590 காசாக உயர்வு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3ம் தேதி வரை முட்டை விலை 540 காசாக இருந்தது. அதைத்தொடர்ந்து தினமும் 5 காசுகள் வீதம் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று முட்டை விலையில், மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சில்லறை விலையும் கடைகளில் உயர்ந்து வருகிறது.
Advertisement
Advertisement