Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்திய ராணுவ நடவடிக்கைக்கு எடப்பாடி பாராட்டு

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: பிரதமர் மோடியின் தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாகிஸ்தான் அரசின் தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒன்றிய அரசு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இது முப்படை தளபதிகளின் திறமைக்கு கிடைத்திருக்கும் வெற்றி. முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைக் காக்கும் ஒன்றிய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமாகா துணை நிற்கும்.

நடிகர் விஜய்:தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.