Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடிக்கு தோல்வி பயம்: செங்கோட்டையன் பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை நிருபர்களை சந்தித்தார். அப்போது, தவெக குறித்த பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் பற்றி கேட்டபோது, ‘‘தவெகவை பொறுத்தவரை தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளார்கள். இரண்டு இயக்கங்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டுமா?. புதிதாக ஒருவர் வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த இயக்கம் வீறுநடை போட்டு வருகிறது. தவெக வெற்றியை தடுக்க முடியாது’’ என்றார். விஜய் குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ‘‘தோல்வி பயம் ஏற்பட்டதால் இதுபோன்ற கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

என்ன கருத்து வேண்டுமானாலும் அவர் சொல்லட்டும், அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அது ஒட்டுமொத்தமாக கொடுக்க வேண்டியது. ஆனால் ஒவ்வொரு நாளும் சிந்தித்து தேர்தல் அறிக்கை தருவதில் இருந்தே, அவர் எவ்வளவு தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது’’ என்றார். ஓபிஎஸ், தவெக கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதில் அளிக்க மறுத்து விட்டார்.