தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Advertisement

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: காஷ்மீரில், ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் ‘பஹல்காம்’ பகுதியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்த நேரத்தில், காட்டுப்பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து, சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் இப்போது வரை 28 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை அரசு மீட்டு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குனமடைய பிரார்த்திக்கிறேன்.

Advertisement